< Back
மாநில செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு

தினத்தந்தி
|
3 Sept 2023 12:02 AM IST

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்,

நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் குமரவேல் தலைமையில் மாவட்ட தலைவர் நாகூர்கனி, மாவட்ட செயலாளர் கண்இளங்கோவன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு உள்பட ஏராளமானோர் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோர் சமீபத்தில் சென்னை மாநகர ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சீமானின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் பணம் பறிக்கும் நோக்கிலும் எந்தவித ஆதாரமுமின்றி பொய் புகார் அளித்துள்ளனர். எனவே, மேற்கண்ட செயலில் ஈடுபட்டுள்ள முன்னாள் நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்