< Back
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு
தென்காசி
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு

தினத்தந்தி
|
13 Dec 2022 12:15 AM IST

தென்காசி பாறையடி தெரு பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசி தொகுதி தலைவர் அழகுபாண்டியன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'தென்காசி பாறையடி தெரு பகுதியில் மக்கள் நடமாடக்கூடிய பொது வழிப்பாதையை ஒரு சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்