< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நல்லகண்ணு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் - முத்தரசன் தகவல்
|27 Jan 2023 2:08 PM IST
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர்.இரா.நல்லகண்ணு சாதாரண உடல்நலக் குறைவால் 24.01.2023 செவ்வாய் கிழமை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகின்றார்கள். மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு அவர் ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார் என தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.