< Back
மாநில செய்திகள்
நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
26 July 2022 4:26 AM IST

நளினிக்கு 7-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காட்பாடி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி பரோல் வழங்கப்பட்டது.

தன்னுடைய தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் நளினிக்கு 7-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்