< Back
மாநில செய்திகள்
நாகூர்- சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு.. பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலப்பு
மாநில செய்திகள்

நாகூர்- சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு.. பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலப்பு

தினத்தந்தி
|
3 March 2023 10:33 AM IST

கடலில் போடப்பட்டுள்ள குழாய் உடைந்துள்ளதால், பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.

நாகை,

நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கடலில் போடப்பட்டுள்ள குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்து உள்ளது.

கச்சா எண்ணெய் அதிக அளவில் கடலில் கலந்துள்ளதால், நாகூரில் உள்ள மீனவ கிராமங்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதுடன், மீன்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்