ராணிப்பேட்டை
நாகத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
|காட்ரம்பாக்கம் கிராமத்தில் நாகத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. அமைச்சர் காந்தி கலந்துகொண்டார்.
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த காட்ரம்பாக்கம் கிராமத்தில் நாகத்தம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு் ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து கோபூஜை, கலச பூஜை, யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. யாக பூஜையில் வைக்கப்பட்ட கலசங்கள் மங்கலவாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து கோபுர கலசம் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் கும்பமரியாதை செய்யப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பகதர்கள் கலந்து கொண்டனர்.