< Back
மாநில செய்திகள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் காலமானார்
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் காலமானார்

தினத்தந்தி
|
13 Jan 2023 8:22 AM IST

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சென்னை,

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரான நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவால் நாகராஜன் சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு 12:15 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன், வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக இருந்தவர். மதுரை புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜனை கடந்த 2022-ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்