< Back
மாநில செய்திகள்
நாகை தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நாகை தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

தினத்தந்தி
|
7 Oct 2023 12:15 AM IST

பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி நாகை தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி நாகை தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

நாகை தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் ராஜா, வடிவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். நகர செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கருகும் பயிரை காப்பாற்ற காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம்

திருக்குவளை தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்துல்அஜீஸ் முன்னிலை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் நாகைமாலி எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகையன், மாவட்டக்குழு உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அபூபக்கர் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் முத்தையன் முன்னிலை வகித்தார். இதில் நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்