< Back
மாநில செய்திகள்
நாகை எம்.பி. செல்வராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்
மாநில செய்திகள்

நாகை எம்.பி. செல்வராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்

தினத்தந்தி
|
13 May 2024 6:48 AM IST

நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.

சென்னை,

நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் (67 வயது) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு உறுப்பினரான நாகை செல்வராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

நாகை செல்வராஜ் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து பல ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் மூச்சுத்திணறல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

திருவாரூர் சித்தமல்லியைச் சேர்ந்த செல்வராஜ், 1989 முதல் தொடர்ச்சியாக 7 முறை நாகை மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 1989, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்