< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாகை: ரூ.1 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸை கடத்திய கும்பல் கைது
|10 July 2022 2:09 PM IST
நாகையில் திமிங்கலத்தின் எச்சமான அம்பர்கிரிஸை கடத்திய 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
நாகப்பட்டிணம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமிங்கலத்தின் எச்சமான அம்பர்கிரிஸை கடத்திய 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இருசக்கர வாகனத்தில் 3 கிலோ 750 கிராம் எடையுள்ள அம்பர்கிரிஸை 6 பேர் கடத்திச் சென்றதை வனத்துறையினர் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, அவர்களை கைது செய்த வனத்துறையினர் ரூ. 1 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.