தேனி
நாடார் சரசுவதி கலை கல்லூரியில்பட்டமளிப்பு விழா
|தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்றார்.
கல்லூரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் கலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கி பேசினார். விழாவில், பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த 14 மணவிகளுக்கு தங்கப்பதக்கமும், 2-வது இடம் பிடித்த 9 மாணவிகளுக்கு வெள்ளிப் பதக்கமும், 826 மாணவிகளுக்கு பட்டமும் வழங்கப்பட்டது. இதில், உறவின்முறை நிர்வாகிகள், பேராசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.