திருச்சி
காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர்-காங்கிரசார் மாலை அணிவிப்பு
|காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர்-காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காமராஜர் பிறந்த நாள் விழா
இந்திய நாடார் பேரவை சார்பில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் நடைபெற்றது. விழாவுக்கு இந்திய நாடார் பேரவை தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ் தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் ஆழ்வார்தோப்பு டி.ஜெயராஜ், பொதுச்செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் எஸ்.வி.கணேசன், கவுரவ தலைவர் சித்திரைவேல், வணிகரணி செயலாளர் சரவணன், துணை பொருளாளர் கே.ஆர்.பி.ராஜா, அமைப்பாளர் பாலகிருஷ்ணன், முதன்மை செயலர் பிரைட் மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் அன்பழகன், தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, தமிழ்நாடு வணிகர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு, இந்திரதேச மக்கள் கட்சி தலைவர் பாச.ராஜேந்திரன் மற்றும் இந்திய நாடார் பேரவை நிர்வாகிகள், பாலக்கரை நாடார் சமூக இளைஞர் சங்க நிர்வாகிகள், எடமலைப்பட்டி புதூர் நாடார் சங்க நிர்வாகிகள், நெல்லை நாடார் உறவின் முறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.
சிலைக்கு மாலை
இதேபோல் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருச்சி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் ஆலோசனை தலைவர் எஸ்.ஜெ.மணி நாடார் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பொதுச்செயலாளர் சண்முகதுரை, இணை செயலாளர் வக்கீல் சிவா, பொருளாளர் பழக்கடை சரவணன், வி.ஏ.ஓ. கிருஷ்ணமூர்த்தி, வேங்கூர் சேசுராஜ், வக்கீல் அருண்பிரகாஷ், போஸ் செல்வக்குமார், காட்டூர் அருள்ராஜ், இளங்கோ, முத்துக்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியினர்
மேலும் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜவகர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் ரெக்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.திருச்சி காட்டூர் கைலாஷ் நகரில் காமராஜர் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கோடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. காட்டூர் கோட்ட தலைவர் ராஜா டானியல் ராய் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினரும், திருச்சி மாநகராட்சி கவுன்சிலருமான ரெக்ஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான ஜவகர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வார்டு தலைவர்கள் நடராஜன், அண்ணாதுரை, செபஸ்தியான், நடராஜன், ஜாஹீர் உசேன், மாவட்ட துணை தலைவர் மஞ்சதிடல் மணி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.