< Back
மாநில செய்திகள்
காமராஜர் சிலைக்கு தட்சணமாற நாடார் சங்க நிர்வாகிகள் மாலை அணிவிப்பு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

காமராஜர் சிலைக்கு தட்சணமாற நாடார் சங்க நிர்வாகிகள் மாலை அணிவிப்பு

தினத்தந்தி
|
16 July 2023 12:34 AM IST

நெல்லையில் காமராஜர் சிலைக்கு தட்சணமாற நாடார் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த சிலைக்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தினர் செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார், ரகுநாதன் நாடார், இசக்கிமுத்து என்ற அசோகன் நாடார், நித்தியபாலையா நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்