திண்டுக்கல்
நாடார் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம்
|திண்டுக்கல்லில் நாடார் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட நாடார் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் நத்தம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மதிதேவராஜ் என்ற ரவீந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் மங்கைராஜா ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் நாகுச்சாமி வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில், திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்துக்கு வரும் அரசு பஸ்கள் அனைத்திலும் 'காமராஜர் பஸ் நிலையம்' என்ற வாசகம் இடம்பெற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அதிக மதிப்பெண்களை பெறும் சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதையடுத்து 11 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உதவி தலைவர்கள் பரமசிவம், வக்கீல் சிவா, உதவி செயலாளர் சரவணன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.