< Back
மாநில செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கும்: சீமான் அறிவிப்பு
மாநில செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கும்: சீமான் அறிவிப்பு

தினத்தந்தி
|
19 Jan 2023 1:15 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியை பொருத்தவரை தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டே வருகிறது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக களம் இறங்குகிறது. தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் கடுமையாக பிரசாரம் மேற்கொள்வோம். நானும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்