< Back
மாநில செய்திகள்
குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய ஒப்பந்த ஊழியரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
சென்னை
மாநில செய்திகள்

குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய ஒப்பந்த ஊழியரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

தினத்தந்தி
|
2 Jun 2023 1:08 PM IST

சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய ஒப்பந்த ஊழியரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 32). இவர், சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று மாதவரம் பொன்னியம்மன்மேடு திருமால் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்ஷல் ராஜ்குமார்(42) என்பவர் தினேஷ்குமாரிடம் தனது வீட்டு வாசலில் உள்ள மண்ணை சமன் செய்து கார் நிறுத்த வசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு கூறினார். அதற்கு தினேஷ்குமார், பணி முடிந்ததும் செய்து தருகிறேன் என்றார். இதில் ஆத்திரம் அடைந்த மார்ஷல்ராஜ்குமார், தினேஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.

இது குறித்து தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மார்சல் ராஜ்குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்