< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி

தினத்தந்தி
|
11 Jun 2024 10:22 AM IST

மாநில கட்சி அந்தஸ்து பெற்ற பின் நாம் தமிழர் கட்சி களம் காணும் முதல் தேர்தல் இதுவாகும்.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 21-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மாநில கட்சி அந்தஸ்து பெற்ற பின் நாம் தமிழர் கட்சி களம் காணும் முதல் தேர்தல் இதுவாகும்.

இடைதேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி, நிரந்தர சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை அணுகும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்