< Back
மாநில செய்திகள்
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை
மாநில செய்திகள்

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
5 Dec 2022 11:35 AM IST

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் அய்யனார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஏழை மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில் நடக்கும் நிர்வாக சீர்கேடுகளால் நோயாளிகள் சரியான முறையில் கவனிக்கப்படுவதில்லை. டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை இருப்பதால் இங்கு பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கடும் பணிச்சுமைக்கு உள்ளாகின்றனர்.

இங்கு வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர்கள் நோயாளிகளிடம் கட்டாய பண வசூலில் ஈடுபடுகின்றனர். நோயாளிகளை கவனிக்க வரும் உறவினர்களுக்கு ஆஸ்பத்திரியில் தங்குமிடம் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை. இந்த பிரச்சினைகளுக்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்