< Back
மாநில செய்திகள்
நாம் தமிழர் கட்சியினர் கைது
கரூர்
மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் கைது

தினத்தந்தி
|
30 Sept 2023 11:11 PM IST

நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டிற்கு காவிரி நதிநீர் வழங்காத கர்நாடக அரசையும், காவிரி நதிநீர் உரிமையை பெற்றுத்தராமல் காலம் தாழ்த்திவரும் மத்திய அரசையும், காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட தவறிய தமிழக அரசையும் கண்டித்து நேற்று கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமை தாங்கினார். அப்போது தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவப்பொம்மையை எரித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எரிந்து கொண்டு இருந்த உருவபொம்மையை மீட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் கர்நாடக அரசையும், மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்