< Back
மாநில செய்திகள்
நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது
சேலம்
மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது

தினத்தந்தி
|
26 Oct 2023 1:13 AM IST

சமூக வலைதளங்களில் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

சேலம் தாதகாப்பட்டி திருஞானம் முதல் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 49). நாம் தமிழர் கட்சி பிரமுகரான இவர், சங்கீத் தியேட்டர் அருகே ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சேலம் மாநகராட்சி 56-வது கோட்ட தி.மு.க. செயலாளர் முருகேசன், செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு குமரேசனை கைது செய்தனர். இவர் மீது அவதூறு பரப்புதல், புகழுக்கு களங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்