< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி தற்கொலை
|27 May 2024 3:40 PM IST
தற்கொலை செய்து கொண்ட மைக்கேல் ஸ்டாலினின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
மதுரை,
மதுரை திருப்பாலை ஜி.ஆர்.நகர் விரிவாக்கப் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ஸ்டாலின் (வயது 31). அந்த பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும், இவர் நாம் தமிழர் கட்சியின் புதூர் பகுதி பொறுப்பாளராக இருந்தார்.
மைக்கேல் கடந்த சில தினங்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட மைக்கேல் ஸ்டாலினின், கண்களை தானம் செய்வதற்கு அவரது உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர். அதன்படி அவரது கண்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்டது.