< Back
மாநில செய்திகள்
ரயில் நிலையத்தில் மர்ம பொருள் - வெடிகுண்டு நிபுணர்கள், மேப்பநாய் சோதனை:  திண்டுக்கல்லில் பரபரப்பு
மாநில செய்திகள்

ரயில் நிலையத்தில் மர்ம பொருள் - வெடிகுண்டு நிபுணர்கள், மேப்பநாய் சோதனை: திண்டுக்கல்லில் பரபரப்பு

தினத்தந்தி
|
27 Nov 2022 9:12 AM IST

சிகப்பு கலரில் உருண்டை வடிவிலான மர்ம பொருள் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே குட்செட் அருகே உள்ள சாலையில் சிகப்பு கலரில் உருண்டை வடிவிலான மர்ம பொருள் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து திண்டுக்கல் நகர் டிஎஸ்பி. கோகுல கிருஷ்ணன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மோப்பநாய் லிசா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் அது பெரிய வடிவில் ஆன ரப்பர் பால் என தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பந்தை அங்கிருந்து ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்