< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
எள் செடிகளுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு
|4 Jun 2022 8:29 PM IST
குரவப்புலத்தில் அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா குரவப்புலத்தை சேர்ந்தவர் மனோகரன்.விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் எள் சாகுபடி செய்து இருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு எள்செடிகளை அறுவடை செய்து வயலில் பட்டறையாக வைத்து மூடி வைத்திருந்தார் இந்த நிலையில் சம்பவத்தன்று அறுவடை செய்யப்பட்டிருந்த எள் செடிகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான எள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து மனோகரன் வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.