< Back
மாநில செய்திகள்
பரங்கிமலையில் மாயமான வாலிபர் ரெயிலில் அடிபட்டு பிணமாக மீட்பு
சென்னை
மாநில செய்திகள்

பரங்கிமலையில் மாயமான வாலிபர் ரெயிலில் அடிபட்டு பிணமாக மீட்பு

தினத்தந்தி
|
8 Aug 2023 5:15 PM IST

பரங்கிமலையில் மாயமான வாலிபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலியாகி கிடந்த தகவல் அறிந்து வந்த மாம்பலம் ரெயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜோசப் (வயது 19). இவர், சவுண்ட் சர்வீஸ் செட் போடும் வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜோசப் அதன்பிறகு மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் தண்டவாளம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் ஜோசப் பலியாகி கிடப்பது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாம்பலம் ரெயில்வே போலீசார், ஜோசப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப், தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலியானாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்