< Back
மாநில செய்திகள்
மாயமான மாணவர் திருச்சி ரெயில் நிலையத்தில் மீட்பு
அரியலூர்
மாநில செய்திகள்

மாயமான மாணவர் திருச்சி ரெயில் நிலையத்தில் மீட்பு

தினத்தந்தி
|
27 Jun 2023 12:01 AM IST

மாயமான மாணவர் திருச்சி ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்டார்.

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மகன் முத்துக்கருப்பன்(வயது 13). இவர் குணமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 23-ந் தேதி மாலை அவரது தாத்தா லூர்துசாமியிடம் விக்கிரமங்கலத்திற்கு சென்று சர்க்கஸ் பார்க்க வேண்டும், அதற்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த முத்துக்கருப்பனை அன்று மாலை முதல் காணவில்லை. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், முத்துக்கருப்பனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 25-ந் தேதி மாலை திருச்சி ரெயில் நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்த முத்துக்கருப்பனை சைல்ட ஹெல்ப் லைன் போலீசார் மீட்டனர். இது பற்றி விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முத்துக்கருப்பனின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் திருச்சி சென்று, முத்துக்கருப்பனை அழைத்து வந்தனர். பின்னர் முத்துக்கருப்பனின் குடும்பத்தினர், அவரை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்