< Back
மாநில செய்திகள்
மாயமான பிளஸ்-2 மாணவிகள் சென்னையில் மீட்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மாயமான பிளஸ்-2 மாணவிகள் சென்னையில் மீட்பு

தினத்தந்தி
|
2 Aug 2022 10:42 PM IST

உளுந்தூர்பேட்டையில் மாயமான பிளஸ்-2 மாணவிகள் சென்னையில் மீட்பு

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் களமருதூர்ப்குதியை சேர்ந்த 2 மாணவிகள் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றவர்கள் மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது மாணவிகள் இருவரும் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை காணாததால் இதுபற்றி திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மற்றும் கடைவீதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மாணவிகள் இருவரும் வெளியூருக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால் திருச்சி, சேலம் மற்றும் சென்னைக்கு சென்று அவர்களை தேடி கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர் 3 தனிப்படைகளும் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று மாணவிகளை தேடினர். அப்போது சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்றிருந்த இரு மாணவிகளையும் இன்ஸ்பெக்டர்கள் அசோகன், விஜி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் மீட்டு உளுந்தூர்பேட்டைக்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்