< Back
மாநில செய்திகள்

திருவள்ளூர்
மாநில செய்திகள்
கோவில் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

21 March 2023 2:38 PM IST
திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக சுமார் 8 ஆயிரம் சதுர அடி நிலம் திருவள்ளூர்- அரக்கோணம் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இந்த நிலத்தில் ஏழை மக்கள் பயன்பெரும் வகையில் திருமண மண்டபம், கோசாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அறநிலையத்துறை சார்பில் அந்த நிலம் சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மர்மநபர்கள் சுற்றுச்சுவரை கடப்பரையால் இடித்து சேதப்படுத்தி உள்ளனர். சுற்றுச்சுவரை சேதப்படுத்திய மர்மநபர் மீது போலீஸ் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அறநிலையத்துறை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.