< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்...! திருவள்ளூரில் பரபரப்பு
|2 Jan 2023 9:08 AM IST
பொன்னேரி அருகே அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையின் முகம், கையை மர்மநபர்கள் இன்று சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்க வந்த சோழவரம் போலீசார், சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும், இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பேத்கர் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.