< Back
மாநில செய்திகள்
குப்பைக் கழிவுகளை கொட்டும் மர்ம நபர்கள்
தேனி
மாநில செய்திகள்

குப்பைக் கழிவுகளை கொட்டும் மர்ம நபர்கள்

தினத்தந்தி
|
7 Sept 2023 3:30 AM IST

கூடலூர்-கம்பம் சாலையோரத்தில் குப்பைக் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச்செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் கடைசி எல்லை நகரமாக கூடலூர் அமைந்து உள்ளது. கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரள மாநிலம் குமுளி பகுதிக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக காய்கறி மற்றும் வாழைத்தார்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீண்டும் தமிழகம் வரும்போது இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், உணவு விடுதிகளில் உள்ள கழிவுப்பொருட்கள், கேரளாவிற்கு கொண்டு செல்லும் வாழைத்தார் கழிவுகள் ஆகியவைகளை லாரிகள் மூலம் கொண்டு வந்து தமிழக எல்லைப் பகுதியில் கொட்டி விட்டு செல்கின்றனர். குறிப்பாக குமுளி லோயர்கேம்ப் வனப்பகுதி, கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலை அப்பாச்சி பண்ணை ஆகிய இடங்களில் மர்ம நபர்கள் குப்பை கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கேரள மாநிலத்திலிருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதை தடுக்க தமிழக போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்