< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
அரிவாளுடன் சுற்றித்திரிந்த மர்மநபர்கள்
|26 Feb 2023 12:15 AM IST
அரிவாளுடன் சுற்றித்திரிந்த மர்மநபர்கள்
நீடாமங்கலம் ெரயில் நிலையத்தில் மர்மநபர்கள் 3 பேர் நேற்று மாலை நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் சந்தேகத்தின்ே்பரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு வாலிபரின் இடுப்பில் வைத்திருந்த அரிவாள் தரையில் விழுந்தது. இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த மர்மநபர்கள் ஸ்கூட்டரில் வந்து நீடாமங்கலம் பெரியார் சிலை பகுதியில் சந்தேகத்தின்பேரில் நின்றிருந்ததாகவும், அவர்களை நீடாமங்கலம் போலீசார் விசாரித்தபோது ஒரு அரிவாளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. அரிவாளுடன் சுற்றித்திரிந்த மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.