< Back
மாநில செய்திகள்
வாலிபர் மர்ம சாவு -போலீசார் தீவிர விசாரணை
மதுரை
மாநில செய்திகள்

வாலிபர் மர்ம சாவு -போலீசார் தீவிர விசாரணை

தினத்தந்தி
|
21 Sept 2023 2:14 AM IST

வாலிபர் மர்ம சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பேட்டை புதூர் பாலத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் காயங்களுடன் மயங்கி கிடப்பதாக போடிநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் காளீஸ்வரி, உதவியாளர் கண்ணன் ஆகியோர் வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா பைன்கரா என தெரிய வந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்