< Back
மாநில செய்திகள்
பள்ளி சென்று வீடு திரும்பிய 9-ம் வகுப்பு மாணவி மர்ம சாவு - போலீசார் விசாரணை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பள்ளி சென்று வீடு திரும்பிய 9-ம் வகுப்பு மாணவி மர்ம சாவு - போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
22 July 2022 2:20 PM IST

பள்ளி சென்று வீடு திரும்பிய 9-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திருமங்கை ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது 14). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-வது வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை மாணவி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் கழிவறைக்கு சென்றவர் அங்கே மயங்கி விழுந்து உள்ளார்.

அவரது பெற்றோர் பாக்கியலட்சுமியை மீட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு பாக்கியலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் மாணவியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்