< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வீட்டில் இருந்து மாயமான சிறுவன் மீட்பு! கடத்தலில் ஈடுபட்டது யார்? போலீசார் தீவிர விசாரணை
|16 July 2022 10:19 PM IST
கச்சிராயபாளையம் அருகே வீட்டில் இருந்து மாயமான சிறுவன் 10 நாட்களுக்கு பின்னர் நலமுடன் மீட்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கராயப்பாளையம் பொட்டியம் சாலையில் வசித்து வருபவர்கள் லோகநாதன் -கௌரி தம்பதி. எல்.கே.ஜி படித்து வரும் இவர்களது மகன் தருண் ஆதித்யா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து , காணாமல் போனார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை தேடி வந்தனர்.
இந்நிலையில்10 நாட்களுக்கு பின்னர், கணியாமூர் கிராமத்தில் சிறுவன் தருண் ஆதித்யாவை பத்திரமாக மீட்டனர். மேலும் சிறுவனை கடத்திச் சென்றவர்கள் யார், எதற்காக கடத்திச் சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,