< Back
தமிழக செய்திகள்

விருதுநகர்
தமிழக செய்திகள்
மாயமான ஆட்டோ டிரைவர் பிணமாக மீட்பு

19 Jun 2023 12:38 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் மாயமான ஆட்டோ டிரைவர் பிணமாக மீட்கப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியத்தை சேர்ந்தவர் மருது பாண்டியன் (வயது 29). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி அருகே உள்ள மொட்டை மலை பெட்ரோல் பங்க் பின்புறம் முகம் சிதைந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர்.
இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக விருதுநகா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.