< Back
மாநில செய்திகள்
என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!
மாநில செய்திகள்

என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!

தினத்தந்தி
|
23 Sept 2023 3:00 PM IST

சண்டையில் யார் நாக்அவுட் ஆகி கீழே விழுகிறார்களோ, அவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும் என வீரலட்சுமி கூறியிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில், நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். இதனால் சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. வீரலட்சுமிக்கு எதிராக சீமான் பல முறை கருத்துகளை முன்வைத்தார்.

அதன்பின்னர் வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை பாக்சிங்கிற்கு அழைப்பு விடுப்பதாக ஒரு ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவியது. இதற்கு பதிலளித்த சீமான், பாக்சிங்கிற்கு தயார் என்றும், இடம் மற்றும் நேரத்தை அறிவித்தால் உடனே வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சீமானின் சவாலை ஏற்ற வீரலட்சுமி, சண்டைக்கு நாள் குறித்து, இடத்தையும் அறிவித்தார். இதுதொடர்பாக வீரலட்சுமி பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் வீரலட்சுமி பேசியிருப்பதாவது:-

நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இடம் திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் வட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிரவுண்ட். இந்த இடத்தைத்தான், என் கணவர் கணேசனுடன் நீங்கள் (சீமான்) சண்டை போடுவதற்கான இடமாக தீர்மானித்திருக்கிறோம்.

2024ம் ஆண்டு தை மாதம் காணும் பொங்கல் அன்று எனது கணவருக்கும், உங்களுக்கும் இங்குதான் சண்டை நடக்க போகிறது. இந்த சண்டையில் பாக்ஸிங், கராத்தே, குங்பூ, மல்யுத்தம்... இதில் எந்த சண்டை வேண்டுமென்றாலும் செய்யலாம். அனைத்தையும் சமாளிக்க எனது கணவர் தயாராக இருக்கிறார். இந்த சண்டையில் யார் நாக்அவுட் ஆகி கீழே விழுகிறார்களோ, அவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். என்ன பந்தயம் என்பது குறித்து போட்டி நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கிறேன்.

இவ்வாறு வீரலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்