< Back
மாநில செய்திகள்
அனைத்து கிறிஸ்தவப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ்  நல்வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

அனைத்து கிறிஸ்தவப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
24 Dec 2023 6:37 PM IST

கருணையின் திருவுருவமாக விளங்கும் இயேசுபிரான் அவதரித்த இந்த நாளில் அனைவர் வாழ்விலும் துன்பங்கள் நீங்கட்டும், இன்பங்கள் பொங்கட்டும்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

செல்வங்களில் மேலானது அன்புதான் என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டிய இயேசுநாதர் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்தவப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'அன்பே வாழ்வின் நெறி' என்று வாழ்ந்துகாட்டிய இயேசுபிரான் பிறந்த இந்த நாளில், இன்னா செய்தவர்கள் நாணும்படி அவர்களுக்கு நன்னயம் செய்த இயேசு பிரான் அவதரித்த இந்த நாளில், அராஜகம், அகங்காரம், ஆணவம், துரோகம் ஆகியவற்றை அகற்றி, அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவை தழைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். பகைமையை தகர்த்தெறிந்து ஒற்றுமையை வளர்ப்போம் என சூளுரைப்போம்.

கருணையின் திருவுருவமாக விளங்கும் இயேசுபிரான் அவதரித்த இந்த நாளில் அனைவர் வாழ்விலும் துன்பங்கள் நீங்கட்டும், இன்பங்கள் பொங்கட்டும், வருகின்ற ஆண்டு வளம் கொழிக்கும் ஆண்டாக மலரட்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்வதோடு, மீண்டும் ஒருமுறை எனது அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்