< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
ஊராட்சி அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
|21 May 2022 12:02 AM IST
ஊராட்சி அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள கச்சிராயன்பட்டி ஊராட்சி கல்லம்பட்டியில் குடிநீர் வினியோகம் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வினியோகம் தடைபட்டதால் அந்தபகுதி பொது மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனை தொடர்ந்து பெண்கள் காலி குடங்களுடன் ஊரட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி அலுவலத்தில் முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் அமிர்தம் ஆண்டிச்சாமி முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் சில தினங்களுக்குள் குடிநீர் பிரச்சினை முற்றிலும் சரிசெய்யப் பட்டு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.