< Back
மாநில செய்திகள்
தியாகதுருகம் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தியாகதுருகம் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
17 Jun 2022 9:44 PM IST

தியாகதுருகம் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா கடந்த 10-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து சாமிக்கு தினசரி சிறப்பு பூஜைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்