< Back
மாநில செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்
கரூர்
மாநில செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்

தினத்தந்தி
|
10 April 2023 7:00 PM GMT

முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.

கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 2-ந்தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மன் அன்னம், சர்ப்பம், யானை, புலி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 7-ந்தேதி பூச்சொரிதல் விழா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் கோவிலை சுற்றி முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடிநின்ற பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்