< Back
மாநில செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
26 May 2022 5:46 PM GMT

வடகீரனூரில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே வடகீரனூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சீரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் சிறப்பு யாக பூஜை, ஹோமங்கள் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்