< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
|13 Aug 2023 11:54 PM IST
முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா இன்று நடைபெற்றது. தொடர்ந்து பாலச்சந்திர விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் பூத்தட்டுகளை சுமந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் பூக்களை முத்துமாரியம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து வருகிற 18-ந்தேதி லெட்ச்சார்ச்சனையும், 20-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது.