< Back
மாநில செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

தினத்தந்தி
|
16 July 2023 11:53 PM IST

முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடந்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பெண்கள் மேள தாளங்கள் முழங்க பூ தட்டுகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கொண்டு வந்த பூக்களை அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். இதேபோல வாகன உரிமையாளர்கள், வாகனங்களிலும் பூ தட்டுகள் கொண்டு வந்தனர். டன் கணக்கில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகிற 23-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. 30-ந் தேதி பொங்கல் விழாவும், 31-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்