< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
|11 Aug 2022 10:23 PM IST
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
பாலக்கோடு:-
பாலக்கோடு அருகே அவுசிங்போர்டு குடியிருப்பில் முத்துமாரியம்மன் கோவில் 9-ம் ஆண்டு திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கிராம மக்கள் ஒன்றிணைந்து கங்கா பூஜை செய்தனர். பொங்கல் வைத்தும், அம்மனுக்கு கூழ் ஊற்றியும் வழிபாடு நடத்தப்பட்டது.
மாவிளக்கு, பூங்கரகம், பால்குடம் எடுத்தல், அலகு குத்தி பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும் ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.