< Back
மாநில செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

தினத்தந்தி
|
18 Sept 2023 12:34 AM IST

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

கறம்பக்குடி திருவோணம் சாலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் கோவில் முன்பு கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கறம்பக்குடி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்