< Back
மாநில செய்திகள்
முத்துமாரியம்மன், கருப்பராயர் கோவிலில் கும்பாபிஷேகம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

முத்துமாரியம்மன், கருப்பராயர் கோவிலில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
13 Jun 2022 9:38 PM IST

பொள்ளாச்சி, சுல்தான்பேட்டையில் முத்துமாரியம்மன், கருப்பராயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சுல்தான்பேட்டை

பொள்ளாச்சி, சுல்தான்பேட்டையில் முத்துமாரியம்மன், கருப்பராயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழா

சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிபட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த 10-ந் தேதி மாலை 6 மணிக்கு மங்கல இசை, விநாயகர் வழிபாடு, புண்ணியாவாசணம், பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு பெரிய விநாயகர், தொட்டி நாயக்கர் மணிமண்டபம், செல்வ விநாயகர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் லிங்கோத்பவர், நவகிரக தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனையை தொடர்ந்து யாத்ரா தானம், கலசங்கள் கோவிலை சுற்றி வருதல் நடந்தது. பின்னர் 9.30 மணிக்கு முத்து மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தசதானம், தச தரிசனம் நடந்தது. மாலை 6 மணிக்கு முத்து மாரியம்மனுக்கு திருக்கல்யாணம், திருவிளக்கு வழிபாடு, அம்மன் திருவீதி உலா நடந்தது. பின்னர் மகா அபிஷேகம், அலங்காரம், மகா நெய்வேத்தியம், மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

இதேபோன்று பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் கருப்பராயர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 11-ந் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை பூர்வாங்க பூஜை, அனுக்ஞை, நவக்கிர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கும்பாலங்காரம், விக்னேஷ்வர பூஜை, முதல் காலயாக பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தன. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து காலை 8 மணி முதல் மகா அபிஷேகம், தசதரிசனம், கோபூஜை, மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்