< Back
மாநில செய்திகள்
முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மதுரை
மாநில செய்திகள்

முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
24 April 2023 2:21 AM IST

செம்மினிபட்டியில் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிபட்டி ஊராட்சி மன்றம் அருகில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கருங்கல்லினால் ராஜ கோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி முதல் கால யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கி வாஸ்து சாந்தி, வேதிகா அர்ச்சனை, இரண்டாம் காலம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7.45 மணிக்கு நான்காம் கால யாகபூஜை தொடங்கி கணபதி பூஜை, சங்கல்பம் புண்ணியாக வாசகம் உள்ளிட்ட பல பூஜைகள் செய்து கடம் வலம் புறப்பட்டு புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த யாகசாலை கும்பாபிஷேகத்தை மணிகண்ட சுவாமிகள் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை யொட்டி அன்னதானம் நடந்தது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கோவில் அருகில் உள்ள குளத்தில் கரைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்