சென்னை
தாம்பரத்தில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
|தாம்பரத்தில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம்,
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் சென்னையை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக பெண்கள் உள்பட ஏராளமான முஸ்லிம்கள், தாம்பரம் ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து சண்முகம் சாலை பாரதி திடல் வரை பேரணியாக வந்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிக்கோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கண்டன உரையாற்றினார்.
இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி அனிபா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மகேந்திரன், கவுன்சிலர் புசீராபானு நாசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தேவ அருள் பிரகாசம், திராவிடர் கழக மாவட்ட தலைவர் முத்தையன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகிர்உசேன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.