< Back
மாநில செய்திகள்
விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்ட இஸ்லாமிய மாணவி - ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக நடந்த நிகழ்வு
மாநில செய்திகள்

விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்ட இஸ்லாமிய மாணவி - ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக நடந்த நிகழ்வு

தினத்தந்தி
|
10 May 2023 9:10 PM IST

முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்காக ராஜ்பவனில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் மாணவி ஷப்ரீன் இமானா தங்கவைக்கப்பட்டார்.

சென்னை,

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை வரவழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து மாணவி ஷப்ரீன் இமானா தனது பெற்றோருடன் சென்னை வந்திருந்தார்.

இதையடுத்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்காக ராஜ்பவனில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் மாணவி ஷப்ரீன் இமானா தங்கவைக்கப்பட்டார். இதனிடையே விதிமுறைப்படி இங்கு தனி நபர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்பதை ராஜ்பவன் அதிகாரிகள் கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும் தமிழ் வழியில் கல்வி பயின்று சாதனை படைத்த மாணவிக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் தவறில்லை என கவர்னர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மாணவி ஷப்ரீன் இமானாவின் குடும்பத்தினர் தங்குவதற்காக ராஜ்பவன் விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்