< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|29 July 2023 1:05 AM IST
முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மணிப்பூர் வன்முறையை கண்டித்தும், திருச்சி, தென்னூரில் அனார்பாக் தர்கா இடிக்கப்பட்டதை கண்டித்தும் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் திருச்சி, பாலக்கரையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் முகமதுசபீக் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஐனுல்லாமகுது முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஷேக்அப்துல்லா கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் தேசிய தலைவர் சாதிக்பாட்சா பாவா, மாநில தலைவர் காஜாமுகைதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் முஸ்லிம் லீக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.