< Back
மாநில செய்திகள்
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார் பிரதமர் மோடி
மாநில செய்திகள்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
11 Nov 2022 4:45 PM IST

பிரதமர் மோடி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று நடைபெற்று வருகிறது.

விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் உள்பட மொத்தம் 2,314 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு மதுரை வந்தார். பின்னர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு வந்தார்.

அங்கு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கார் மூலம் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்துக்கு வந்தார். பின்னர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

மேலும் செய்திகள்